Monday, March 20, 2017

83. நாங்க புதுசா (நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க) **

Click here for an AUDIO recording of this Song

நாங்க புதுசா..
நாங்க புதுசா கத்துக்கிட்டப் பாட்டக் கேளுங்க
இந்த பாட்டு கேட்ட-நல்ல மெட்டு தானுங்க 
(SM)
நாங்க புதுசா கத்துக்கிட்டப் பாட்டக் கேளுங்க
இந்த பாட்டு முழுக்கச்-சங்கம் பத்தி-தானுங்க

ஆ-புதுசா கத்துக்கிட்டப் பாட்டக் கேளுங்க
இந்த பாட்டு முழுக்கச்-சங்கக் கதை-தானுங்க

அத படிப்போம் வாரியாளா கத-படிப்போம் வாரியளா
 (2)
(BOTH)
ஏ அம்மா .. ஏ ஐயா
வா அம்மா .. வா ஐயா
(MUSIC)
ஒண்ணாக ப்ரேக்டிஸ்-பண்ணிக் கத்துக்கிட்டோம்
நாங்க ஓத்தர்க்கொத்தர் அட்ஜஸ்ட் பண்ணிப் தேத்திப்புட்டோம்
எந்த-வேலை செஞ்சாலும் முணுமுணுத்தோம்
தெனம் சொல்லிச்-சொல்லி  வரிகளை வரப்பண்ணிட்டோம் 
முத்தாக நாங்க-பாட்டைப் பாடிப்போடுவோம்
அதுக்கு ஒத்துமையா சேந்து-நிண்ணு பாடுபடுவோம்
ஏதேதோ பாடி-நாங்க நிக்க-மாட்டோம்
நீங்க எந்திரிச்சு ஓடும்படி வெக்க-மாட்டோம்
நாங்க புதுசா..
நாங்க புதுசா கத்துக்கிட்டப் பாட்டக் கேளுங்க
இந்த பாட்டு முழுக்கச்-சங்கம் பத்தி-தானுங்க
(MUSIC)
பாட்டு-விட்டு பாட்டு-மாறிப் போவோமுங்க
ஆனா தாளம்-விட்டு ராகம்-விட்டுப் போகமாட்டோம்
எல்லோரும் கஷ்டப்பட்டுக் கத்தோமுங்க
நீங்க கேக்கையிலே கஷ்டப்பட வெக்க-மாட்டோம்
பிசகொண்ணு வந்தாத்-த..விப்போமுங்க
ஆனா சரியாக..ற-வரைக்கும் விடமாட்டோம்
 மேடையில்-வ..ரிசையாத்தான் நிப்போமுங்க
ஆனா பாடும்போது ஆடிடுவோம் நிக்க-மாட்டோம்
நாங்க புதுசா..
நாங்க புதுசா கத்துக்கிட்டப் பாட்டக் கேளுங்க
இந்த பாட்டு முழுக்கச்-சங்கம் பத்தி-தானுங்க
(MUSIC)
கையில்-உண்டு டீவி-இந்த காலத்துலே
அது செல்-ஃபோனு என்னுகிற ரூபத்துலே
அதிலே-எல்லாம் தூங்குகிற நேரத்திலே
நாங்கப் பாத்துக்-கேட்டுக் கத்துக்குவோம் கவலையில்லே
இயர்-ஃபோனு காது-பக்கம் இருக்கையிலே
வீட்டில் சத்தமாகப் பாட்டு-போட்டு படுத்றதில்லே  
கத்துக்கிட்ட பின்னாலே பயமுமில்லே 
நாங்க எதையும்எ-ப்பவும் லேசில்-மறப்பதில்லே
 நாங்க புதுசா..
நாங்க புதுசா கத்துக்கிட்டப் பாட்டக் கேளுங்க
இந்த பாட்டு முழுக்கச்-சங்கம் பத்தி-தானுங்க
ஆ-புதுசா கத்துக்கிட்டப் பாட்டக் கேளுங்க
இந்த பாட்டு முழுக்கச்-சங்கக் கதை-தானுங்க

அத படிப்போம் வாரியாளா கத-படிப்போம் வாரியளா
(4)

No comments:

Post a Comment