Wednesday, March 1, 2017

80. யாதும் உன் ஊரே(பாட்டொன்று கேட்டேன்) **




யாதும்-உன் ஊரே உறவினர்தானே யாவரும்-பூவுலகில்
மானிடர் ஒருமை மாபெரும் பெருமை *வேதத்தில் வேறு இல்லை
(SM)
மானிடர் ஒருமை மாபெரும் பெருமை வேதத்தில் வேறு இல்லை
(MUSIC)
தானென்று கொண்டே தனக்கெனவென்றே
இருப்பார் இருப்பதில்லை.. ஓ இருப்பார் நிலைப்பதில்லை
பலநாள் நிலைப்பதில்லை
தானொன்று கொண்டே பெருமிதம் கொண்டே
வாழ்வதில் பயனுமில்லை ஓ வாழ்வதில் பயனுமில்லை
யாதொரு பயனுமில்லை
பணமும் அறிவும் நிறைந்திருந்தாலும்
ஆணவமார்க்கும் தொல்லை ஆணவம் யார்க்கும் தொல்லை
தேடிப் பிடித்து-நீ சேரிடம்-சேர்ந்திடு கூவியழைத்து-நீ கூட்டுறவாயிரு
நீ தனியாக இருக்கிற போது  சுவைஇல்லையே வாழ்வில்
மானிடர் ஒருமை மாபெரும் பெருமை வேதத்தில் வேறு இல்லை
(MUSIC)
தான்-என்ற போக்கை நீ-கொண்டு நின்றால்
மறைவாய் ஏசுமுன்னை .. ஓ.. ஊரே பேசுமுன்னை  
எவர்-உந்தன் வார்த்தை மதித்துன்னை கேட்பார்
தனித்தால் பெருமை இல்லை  (2)
ஒருமை எனும்-மெய்ப் பெருமை-கொண்டாலே
வேறேதும் தேவையில்லை (2)
தேடிப் பிடித்து-நீ சேரிடம்-சேர்ந்திடு கூவியழைத்து-நீ கூட்டுறவாயிரு
நீ தனியாக இருக்கிற போது  சுவைஇல்லையே வாழ்வில்
மானிடர் ஒருமை மாபெரும் பெருமை வேதத்தில் வேறு இல்லை


* Meet together, speak together,
let your minds be of one accord,
as the Gods of old, being of one mind,
accepted their share of the sacrifice.

May your counsel be common, your assembly common,
common the mind, and the thoughts of these united.
A common purpose do I lay before you,
and worship with your common oblation.

Let your aims be common,
and your hearts of one accord,
and all of you be of one mind,
so you may live well together.

- Rig Veda 10.191.2-4



No comments:

Post a Comment