Wednesday, August 19, 2015

50. வாழ்த்தினைச் சொல்வாயடி தோழி(மன்னவன் வந்தானடி) **





( மன்னவன் வந்தானடி)
 
(விருத்தம்)

நகரினில் குறை-என்று வருபவர் துணை நின்ற சங்கமும் வாழ்க வாழ்க 
 (Music)
அனுதினம் வலம்வந்து நகர் -தன்னில் பயம்தீர்த்த நற்குணம் வாழ்க வாழ்க
 (Music)
சேவையின் மனம்-கொண்ட நல்லவர் வாழ்கிற சங்கமும் வாழ்க வாழ்க 

(Music)
புவி-மிசை மாபெரும் பேரினைப் பெற்றிட்ட அதன்-புகழ் ஒங்க ஒங்க 

(Music)
நடிக்கின்ற குணமின்றி துடிப்போடு செயலாற்றும் நேர்மையும் வாழ்க வாழ்க

(Music)
பிறர் மனம்-கோணி நடக்காமல் நலம்-பேணி திகழ்பாங்கை   நானும் பண்கொண்டு பாட
 
__________________
     (Music)    

வாழ்த்தினைச் சொல்வாயடி தோழி
(1+ Music +1)
சங்கத்தமிழ் எடுத்து நெஞ்சத்திலே நிறைந்து
வாழ்த்தினைச் சொல்வாயடி தோழி

சங்கத்தமிழ் எடுத்து நெஞ்சத்திலே நிறைந்து
வாழ்த்தினைச் சொல்வாயடி
)

வாய் மணக்க நெஞ்சினிக்கக் கேட்டிடுவோர் காதினிக்க 

(2)
வாழ்த்தினைச் சொல்வாயடி தோழி
(MUSIC)


பைந்தமிழ்ச் சொல்லிருக்கும் இனிப்பெடுத்தே
உந்தன் நெஞ்சத்திலே விளங்கும் களிப்பெடுத்தே
(1+Very Short Music+1)
சாற்றிடும் பூ..மா..லை போல்-தொடுத்தே (2)
அடி.. இப்போழுதே இக்கணமே அற்புதமாய் வாய் நிறைய 
வாழ்த்தினைச் சொல்வாயடி தோழி
சங்கத்தமிழ் எடுத்து நெஞ்சத்திலே நிறைந்து
வாழ்த்தினைச் சொல்வாயடி

(MUSIC)
பூவினும்-மெல்லிய தூய-நன்-நெஞ்சுடன் சங்கத்தில் யாவரும் மகிழ்வுடன்-வாழப்பெரும்
வாழ்த்தினைச் சொல்வாயடி + (ஜதி..)    

ச ரி க ம ப த நி.. சரிகமபதநி

அழகுற உயர்வுற சீரும் சிறப்பும் மேலும் சங்கம் தான்-பெறவே
வாழ்த்தினைச் சொல்வாயடி 

(ஜதி..) 

மாதொரு-பாகன் எனச்-சங்..கத்துடன் மாதர் சங்கமும் இணைந்துடன் செயல்படவே
வாழ்த்தினைச் சொல்வாயடி 
(ஜதி..)    
நகரினில் உரைபவர் திருமகள் அருள் பெற
கலைமகள் அருள்-எனக் கல்வியும் வளர்ந்திடவே
வாழ்த்தினைச் சொல்வாயடி

(ஜதி..)    
எண்-திக்..கெங்கிலும் தங்கம் என்னும்
ஆங்கோர் நற்பெயர் சங்கம் கொள்ளும் + (ஜதி..)
பித்தத்தாலென் நெஞ்சமும் துள்ளும்
வண்ணம் பாடி-என் நெஞ்சினை அள்ளும்-உன் வாழ்த்தினை
(MUSIC)   

(ஜதி..)
விரைவினில் நீ நீ ..
தெள்ளமுதாய்.. தா.
அரும் இசைப்பா பா ..
 தந்திடம்மா மா 
எந்தனுக்காய் கா

 விரைவினில் நீ  தெள்ளமுதாய்  அரும் இசைப்பா
தந்திடம்மா எந்தனுக்காய் 

நீ.. தா.. பா.. மா.. கா..
நீ தா பா மா கா
நிதபமக

ச..சத்திய உரை போல் ..

( ஜதி )
ரி..ரீங்கா..ரம்-போல் ...

( ஜதி )
க.. குணம் தரும் மணம் போல் 
( ஜதி )

ம..மனம் எழும் இசை போல் ..( ஜதி )

 ப..பைந்தமிழில் பா..

தா ..தந்திடவே வா..
நி.. நீ உடனே வா ,.
நாளும் புவி-மீதில் உறைவோரும் அதைக்கேட்கும் படி-கூறாய் அதைக்-கூறாய் 

 ( ஜதி )
நாளும் புவிமீதில் உறைவோரும் அதைக்கேட்கும் படி-கூறாய் அதைக்-கூறாய்
சங்கமும் இந்நகரினில் இருக்கையில் இனிஒரு துயரமும் எமக்கிலையே

வாழ்த்தினைச் சொல்வாயடி ( ஜதி )





No comments:

Post a Comment